Home

A person with a mustache

Description automatically generated

                                                           மரண அறிவித்தல் .

தொண்டமானாறு, ஸ்ரீலங்காவை பிறப்பிடமாகவும் லண்டன் Algate ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு வரதலிங்கம் ஜெயசுதன் அவர்கள் சென்ற புதன்கிழமை (24 / 01 /2024 ) அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத்தருகிறேன்.

அன்னார் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். 

இறுதி கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

“Rest in Pease Magane”

தொடர்புகளுக்கு :

பாரதி .

Tel No ; 07905872145

யாவருக்கும் வணக்கம்.  

மீண்டும் நினைவூட்டுதல்.

முன்னால் யங்கம்பன்ஸ் விளையாட்டு கழக தலைவர் அமரர் வைரமுத்து சதாசிவம் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னி்ட்டு,கம்பர்மலை யூகே ஸ்தாபனத்தினால், UK ஸ்தாபனத்தின் மூலம் கல்வி கற்கும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பங்குரன் நீதிதேவி ச.ச நிலையத்தில் ஞாயிறன்று (9/4/23) மாலை 5:30  மணியளவில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.

அந்த நிகழ்ச்சிக்காக செலவழித்த தொகை சுமா‌ர் 40 ஆயிரம் ரூபா, அந்த பணம் எமது ஷ்தாபனத்தின் பணத்தில் இருந்து வழங்கப்படவில்லை! அதை நான்தான் என் சொந்த பணத்தில் இருந்து அன்பளிப்பாக வழங்கியிருந்தேன்.

நிகழ்ச்சியின் புகைப்படங்களையும், செலவழிக்கபட்ட பணத்தின் ரசீதுகளையும் உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.

இங்கனம்,
பாரதி.
கம்பர்மலை UK ஸ்தாபனம்
19/4/2023 .

கம்பர்மலை யூகே ஸ்தாபனம் ,
லண்டன் .
17 / 03 /2023 .
யாவருக்கும் வணக்கம்,
நாங்கள் முடிவெடுத்தபடி தொண்டமானாறு கலைவாணி ச ச நிலையம் நடாத்தும் சிறுவர் பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள,மாதாந்த தொகை சுமார் 10 அயிரம் ரூபா எமது சுசீலன் அவர்களால் வாசிகசாலை தலைவர் திரு பிரேமதாசன் அவர்களிடம் நேற்றய தினம் வழங்கப்பட்டது .
அதன் புகை படத்தை உங்கள் பார்வைக்காக இங்கு தருகிறேன் .

அத்தோடு எங்கள் ஸ்தாபனம் , தொண்டமானாறு ,கெருடாவில் ,அக்கறை போன்ற இடங்களில் வசிக்கும் 174 குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கியமை உங்களுக்கு நினைவு இருக்கலாம் .
அதற்கான உணவு பொருட்கள் வாங்கிய ரசீத்தையும் உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன். அத்தோடு இதற்கான ஆட்டொ செலவோடு ஏனைய செலவுகளையும் பார்த்தால் 5 லட்ஷம் ரூபா வரை செலவாகியுள்ளது. இது எமது அயற்கிராம மக்களுக்கு நாங்கள் செய்த உதவி .
இவற்றை எல்லாம் பார்த்து ஒரு  சிலர்  சகிக்க முடியாமல் இருக்கிறார்கள், நான் போகின்ற  வருகின்ற  இடங்களிலும் இதை பார்த்து இருக்கிறேன். நாங்கள்  இவர்களிடம் எதிர் பார்ப்பதெல்லாம் நீங்களும் இப்படியான உதவிகளை எமதூர் மக்களுக்கு செய்யுங்கள் அல்லது செய்ய முயற்சி ஆவது செய்து பாருங்கள்!, வரவேற்கிறோம் .

நன்றி ,
பாரதி 

யாவருக்கும் வணக்கம்,

மேலே காட்டியபடி திரு சொக்கப்பா அவர்களுக்கு தொண்டன் சுசீலன் 10 ஆயிரம் வழங்கும் புகை படத்தை பார்க்கிறீர்கள். அவர் மனைவியார் சமீபகாலதில் மரணமடைந்ததை அறிவீர்கள்.
அவருக்கு 77 வயது பிள்ளைகளும் இல்லை சீவிக்க வருமானமும் இல்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது சாப்பிடுவதற்கு பணம்தான் வேண்டும் என சொன்னார். எனவேதான் மாதாமாதம் 10 ஆயிரம் ரூபா வழங்க முடிவெடுக்கபட்டு முதல் மாத தொகை நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

இதற்காக முன்வந்து பணம் வழங்கியோர் வருமாறு.
1. கி. இராசேந்திரன்            £100
2. கி. பாஷ்கரதாஸ் ( குட்டி )  £50
3. பூ.  அமிர்தவேல்.                  £50
4. வீ. அமிர்தலிங்கம்              £100

5  M சிவஞானம் ( பிரபு )6 T ஸ்ரீதரன் ( Sri )

ஆகவே, இந்த முயற்சி தொடர்ந்தவண்ணமே இருக்கப்போவதால் உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.

நன்றி,
பாரதி
02/03/2023

யாவருக்கும் வணக்கம்,

இங்கு இரண்டு அம்மையார்களுக்கு அவர்கள் வைத்திய செலவுக்காக தொண்டன் சுசீலனால் பணம் வழங்கும் புகை படங்களை உங்கள் பார்வைக்காக தரப்பட்டுள்ளது.

ஒருவருக்கு புற்று நோய், மற்றவருக்கு வருத்தம் குணமாகி உடல் பயிற்சி செய்ய வேண்டிய நிலை. இவர்களுக்கு எமது ஷ்தாபனம் அவர்கள் சுகமாகும் வரை தொடர்ந்து உதவி செய்யும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேள்.  

நன்றி,
பாரதி.

இன்றய தினம் சீனி அம்மாவிற்கு 10000/:ரூபா வழங்கி வைக்கப்பட்டது

She is a cancer patient,so our charity gives money every month for her treatment.

இன்றய தினம் ஆதிகோவிலடி அக்காவிற்கு 5000/: ரூபா வழங்கி வைக்கப்பட்டது

This lady’s illness has cured but she still need physiotherapy treatments, so we continue to give money every month.

News Updates 31 / 01 /23. 

யாவருக்கும் வணக்ககம், 

தற்போது, எங்கள் ஸ்தாபனத்தின் தற்போதைய செயல் பாட்டுக்களை உங்கள் பார்வைக்காக இங்கு தருகிறேன். 

1. 3 GCE (A /L ) படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கான 

 உபகரணங்கள் கோப்பி, புத்தகம், பேனா போன்றவை 

 வழங்கப்பட்டது. 

2. இன்னும் ஒரு GCE ( O / L ) படிக்கும் மாணவனுக்கு மேற்காட்டிய 

 உபகரணங்களோடு ஓர் சித்திரம் வரையும் புத்தகமும் வழங்கப்பட்டது. 

  அதற்கான ரசீதுகளை உங்கள் பார்வைக்காக இங்கு தருகிறேன். 

  

3. 5 பிள்ளைகளுக்கு தாயான அதிகோவிலடி, வல்வெட்டித்துறை இல் வசிக்கும் திருமதி பு. ராதிகா சுகவீனம் காரணமாக உதவி கோரி வந்தபோது மருத்துவ செலவிற்காக 15 ஆயிரம் ரூபா கொடுத்ததோடு 5 ஆயிரம் பெறுமதியான உணவு பொருட்களும் எமது ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டதை அறிவீர்கள். தற்போது அவர்கள் சுகமாகி,(Physiotherapy) உடல்பயிற்சி சிகிச்சயை செய்து வருகிறார், எனவே அவர்கள் போக்குவரத்து செலவிற்காக 5 ஆயிரம் ரூபா தொண்டன் சுசீலனால் சென்ற கிழமை வழங்கப்பட்டது. 

4. மேலும், வழமைபோல் மாணவர்களின் கல்விக்கான Tution இற்கு கட்டிய      பண ரசீதுகளை உங்கள் பார்வைக்காக தரப்படுகிறது. 

நன்றி, 

பாரதி.  

Kamparmalai UK Foundation,

London.

23.01.2023

யாவருக்கும் வணக்கம் ,

இன்றய தினம் (12/12/22) ஞாயிறன்று சுமார் 37, சத்திரஙாகை , வல்லாவத்தையை சேர்ந்த  குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் ரூபா தொண்டர்கள் சுசீலன் , சபேசன் ஆகியோரால் வழங்கபட்டது.

காரணம் , தனியார் ஒருசிலர் ஏ‌ற்கனவே உணவு பொருட்கள் எமது மக்களுக்கு  வழங்கியதால் அவர்களுக்கு இப்பொழுது மருத்துவ, போக்கு வரத்து செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக எமது ஊரில் பெரு மழையும் அதனால் பேரும் குழிரும்மாக இருப்பதால்தான் இந்த பண உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது .

மொத்தமாக 423 குடும்பங்கள் , எல்லோருக்கும் தலா 2 ஆயிரம் ரூபா நாளை முதல் தொடர்ந்து வழங்கபடும்.

இந்த நேரத்தில் எங்கள் ஊர் மக்களுக்கு உதவி செய்யாது விட்டால் நாங்கள் வெளி நாடுகளில் வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது ?

கம்பர்மலை யுகே ஸ்தாபனம் தன் சேவையை தொடரும் அதற்கு பணம் தந்துகொணடிருக்கும் அனைவருக்கும் நன்றி.

நன்றி,

Updates

Due to the economic crisis in Srilanka, many families are struggling to have at least one meal a day. As far as our villagers are concerned, individuals from our village who live abroad were able to give food parcels to some of them, but many of the families did not have any cash to travel or buy medicines. Hence, our charity decided to give cash to those families, and we were able to give 2 thousand rupees each to 400 families and 23 families from neighboring villages who come and requested help. 

We continue to monitor the situation there and do what we can to help those people. 

Thank you. 

Veeran Amirthalingam. 

யாவருக்கும் வணக்ககம் ,

இங்கு கம்பர்மலையில் வசிக்கும் திருமதி கிட்டினன் தங்கேஸ்வரி அவர்களின் உதவி கோரல் கடிதம் ஒன்றினை உங்கள் பார்வைக்காக தருகிறேன். அவர்கள் புற்று நோய்க்கு ( Cancer ) உள்ளாகி வைத்தியம் செய்வதற்கும் வசதி இல்லாது தனியாக வறுமையுடன் வாழும் நிலைமை அறிய மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது .

கடிதத்தை தயவு செய்து படித்து பாருங்கள் பின்பு உங்களுக்கு புரியும்

இந்த அம்மையாருக்கு மருத்துவ உதவி செய்வது எமது கடமையாகும் .

தம்பி Dr இராசைஜா சொன்னார் ( Medical report ஐ பார்த்து ) இது தொடர்ந்து வைத்தியம் செய்ய வேண்டிய ஒரு நோய் , கட்டாயம் உதவி செய்யத்தான் வேண்டும் என்று .

உதவி செய்வோம்1நீங்களும் உங்கள் அபிப்பிராயங்களை தந்தால் அதை மிகவும் வரவேற்கிறோம் .

நன்றி ,

பாரதி .

 
 
 
 
Kamparmalai uk Foundation.
17/03/2023.
யாவருக்கும் வணக்கம்,

இங்கே எமது ஊர் மக்களின் பல வேண்டுகோள் கடிதங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
இங்கே பலவகையான உதவிகளை வேண்டி இருக்கிறார்கள் இருந்தாலும் படிப்படியாகத்தான் அவர்களது விருப்பங்கள் நிறைவேற்ற முடியும். இரண்டு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கோரி இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் இருவரும் கல்வி நிலையத்தில் சேர்க்கப் படுவார்கள்  அத்தோடு இன்னொரு தாயின் வேண்டுதலுக்கு இணங்க அவரது மகன் கூலி வேலை செய்து உழைப்பதற்காக ஓர் துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முன்பு பல நாடுகளிலும் இருந்து பலர் பணம் அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்கள், கனடா விலிருந்து குணம், சந்திரபால், ரவி, சுபாஸ் ஆகியோர் சில திட்டங்களை  தாங்களே முன்வந்து உதவி  இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
அவ்வாறு யாராவது முன்வந்தால் அவற்றை வரவேற்கிறோம்.

எப்படியாவது இந்த ஆதரவற்ற குடும்பத்தினர்கு உதவி செய்து அவர்களது வாழ்வாரத்தை படிப்படியாக உயர்த்துவது தான் எங்கள் நோக்கம்.

நன்றி,
பாரதி

 

This slideshow requires JavaScript.

 
 
கம்பர்மலை யுகே ஸ்தாபனம்,
லண்டன்,
17/02/21.
 
யாவருக்கும் வணக்கம்,
 
Covid 19 வைரஸ் காரணமாக எங்கள் ஊர் மக்களுக்கு செய்யும் பல சேவைகள் தொடர முடியாமல் இருந்தன, தற்போது ஊர் நிலைமைகள் படிப்படியாக உயர்ந்து வருவதால் நாங்களும் எமது சேவைகளை முடிந்த அளவு முன்னெடுத்துச் செயல்படுத்தவுள்ளோம்.
 
இங்கு ஓர் வேண்டுகோள் கடிதத்தை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
இவற்றை படிக்கும்போது இந்த குடும்பத்தினர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை யாவரும் உணர்ந்து கொள்வீர்கள்.
 
எனவே தான்  திருமதி சு. கல்பனா குடும்பத்தினர்கு அவர்கள் வாழ்ந்து கொள்வதற்கு ஓர் தற்காலிக
 சிறிய வீடு கட்டி தர எமது ஸ்தாபனம் முடிவெடுத்து அதற்கான ஆரம்ப வேலைகளும் இன்று ஆரம்பித்து இருக்கிறது.
இங்கு நான் தற்காலிக வீடு என்பதன் காரணம், வீடு கட்டும் காணி இவர்களுக்கு சொந்தமானது எனவே எதிர் வரும் காலங்களில் அவர்கள் அரசாங்க வீடமைப்பு திட்டத்தின் மூலம் வசதியான வீடு ஒன்றை கட்ட வாய்ப்பு உள்ளது.
 ஆனால் இப்போது அந்த குடும்பத்தினர் வாழ்வதற்கு ஓர் வீடு வேண்டும். அதைத்தான் எமது ஸ்தாபனம் செய்ய முடிவெடுத்து செயல்படுத்தியும் வருகிறது.
 
எனவேதான்,உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்களை இங்கு  தருகிறேன்.
 
செய்வதை சரியாக செய்வோம் எங்கள் ஊர் மக்களின் வழர்ச்சிக்காக.
 
நன்றி,
பாரதி.

This slideshow requires JavaScript.

கம்பர்மலை யுகே ஸ்தாபனம்,
லண்டன்,
21/01/2021.

இங்கு கிரிக்கெட் விளையாட்டு வீரர் உதயசாந். உதயகுமார்  வேண்டிக்கொண்டதின்படி அவர்களுக்கு ஓர் கிரிக்கெட்  பாட் சுமார் 42,500 ரூபா செலவில் வாங்கி, எமது பிரதிநிதிகளால் வழங்கப்படும் புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
இதற்காக அன்பளிப்பு வழங்கியோர்.
1.வீ.சிவதாசன் (சுபாஷ்) €50  CAN
2. வ.குணசேகரம் (ரவி)   €50 CAN
மிகுதி பணம் எமது ஸ்தாபனத்தின் கைஇருப்பில் இருந்து.

எமது பணிகள் பல வழிகளிலும் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதை யாவரும் அறிந்ததே.

நன்றி,
பாரதி.

அன்பான சமூகக் கரிசனை நண்பர்கள் தோழர்களே வணக்கம்! வாழ்க வளமுடன்! தைப் பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள். தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் : தமிழர் திருநாள் – 2021 (வள்ளுவராண்டு 2052) சாதி, மதம், பிரதேசம், தேசம், அரசியல் எனப் பல பேதங்கள் கடந்து பூர்வீகம் – புலப்பெயர்வு என தமிழால், தமிழ்ப் பண்பாட்டால் ஒன்றிணையும் நன்னாள்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என புவியெங்கும் பரவிய வாழ்வில் நம் எண்ணங்களை மகிழ்வோடு பகிரும் கருத்துரைக் காணும் பொங்கலிட அழைக்கிறோம். எதையும் எதிர்கொண்டெழுவதுதான் வாழ்வு இயங்கியல். மீண்டெழும் புதிய உலகில் தகுநல் பட்டறிவோடு இயற்கையுடன் இணைந்த வாழ்வில் அன்பு அரவணைப்போராய் அறம்சார் மானிடர்களாக வாழ வழி காண்போம்! 17. 01. 2021 ஞாயிறு GMT London 14h30 – Paris 15H30 – Toronto 08h30 – India/ Srilanka 20h00 Zoom Meeting ID: 81421061589 Pass code : 977751 தொடர்பு ; தினேஸ்- 00447889665195, ஆனந்தன் (வாட்சப்) 00447961178652 ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’- ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ ‘காக்கை கரவா கரைந்துண்ணும்..’ எனக் கூட்டமாக கூடி மகிழ்ந்து வாழும் மனித மனத்தின் பிரதிபலிப்பான மரபுக் கூற்றுகளை நாம் நம் எதிர்காலத் தலைமுறையினருடன் நிகழ்த்திக் கையளிக்கும் தொன்னமும் தொடர்ச்சியும் நீட்சியுமான பண்பாட்டுத் திருநாள். பழையன கழிந்து புதியன புகட்டும்! – தை பிறந்தால் வழி பிறக்கும்!! எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!! இந் நிகழ்வில் பங்கேற்பதுடன் சமூகத் தொடர்பூடக வாயிலாக பலரும் கலந்துகொள்ள ஆவனசெய்வீர்! இனிய தைப் பொங்கல் – தமிழர் திருநாள் – புத்தாண்டு வாழ்த்துகள்!

Topic: உலகத் தமிழர் தைத்திருநாள்
Time: Jan 17, 2021 02:30 PM London
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81421061589…
Meeting ID: 814 2106 1589
Passcode: 977751
One tap mobile
+13462487799,,81421061589#,,,,*977751# US (Houston)
+16699006833,,81421061589#,,,,*977751# US (San Jose)
Dial by your location
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 6833 US (San Jose)
+1 929 205 6099 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington D.C)
+1 312 626 6799 US (Chicago)
Meeting ID: 814 2106 1589
Passcode: 977751
Find your local number: https://us02web.zoom.us/u/kbhPUtJCSz

WhatsApp Image 2021-01-16 at 15.38.42

யாவருக்கும் வணக்கம்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமரர் கணக்கண்ணா அவர்களின் இறுதிக் கிரியை கனடாவில் நடைபெற்றதை யாவரும் அறிந்ததே.
அப்போது கம்பர்மலை யுகே ஸ்தாபனம் சார்பாக ஓர் மலர் வளையம் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்த திரு தனசேகரம் சந்திரபால் அவர்களை நாடி இருந்தேன், அவர் பெரும் உற்சாகத்துடன் அந்த பொறுப்பை ஏற்று முடித்து தந்தார்.
இங்கு நான் முக்கியமாக அறியத்தருவது என்னவென்றால் திரு சந்திரபால் அவர்கள் அதற்கான செலவை (150 CAN) வாங்க மறுத்து, இந்த பொறுப்பை எமது ஸ்தாபனத்திற்காக தானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். மிகவும் பெருமைப் பட வேண்டியதும்,
பாராட்டப்பட வேண்டிய ஒன்று

இவர் எங்கள் ஊர் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய போது மற்ற நலம் விரும்பிகள் போல பணம் தந்தது மட்டும் அல்லாது ஒரு குடும்பத்தினர்கு அவர்கள் வீட்டு புணர் நிர்மாண வேலைக்கு தானே முன்வந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய்களை வழங்கினார் என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

சந்திரபால்!
நன்றி, நன்றி, நன்றி.

“GOD BLESS YOU “

பாரதி.

WhatsApp Image 2020-11-29 at 19.05.43

Kamparmalai UK Foundation
London,
22/06/2020.

Important announcement

Due to Covid-19 corona virus pandemic we are unable to call Kamparmalai UK Foundation’s 9th year annual general meeting.

During the lockdown in Srilanka we were able to provide 400 families with food parcels in our village and also provided food parcels to 80 very poor families from Mullivaikkal West in the Eastern province of Srilanka as they requested.
More over as self employment we presented sheeps for two families so they better themselves.

Therefore at this difficult time, the current Executive committee will continue to function until further notice.

Thank you,
Regards,
V.Amirthalingam.
Chair Person


This slideshow requires JavaScript.

கம்பர்மலை யுகே ஸ்தாபனம்,
லண்டன்,
30/03/2020.

யாவருக்கும் வணக்கம்,

இன்றும் நாலாவது நாளாக எங்கள் ஊர் மக்களுக்கு உணவுப் பொருட்கள் எமது தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.
கம்பர்மலை கிராமம் உட்பட, மணல்தெரு, உலைக்கையோடை,  மல்லந்தறை, ஊரிக்காடு, பைங்குரன்,முல்லைக்கட்டை, கிழக்குத்தெரு, சத்திரங்கை, வல்லாவத்தை என எல்லா குறிச்சிகள் உட்பட சுமார் 300 குடும்பத்தினர்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நாளைய தினம், உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதால் கொடுக் காத பல குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன்.

பணம் தந்தோர் விபரம் ,

சுரேஷ் – குணரட்ணம் 200 CAD
சுபாஷ் – வீரசிங்கம் 200 CAD

சிவதாசன் – வீரசிங்கம் (பவி)100CAD
தாசன் – வீரசிங்கம் 100 CAD
வடிவேல்- ரவி 210
CAD
சந்திர பால் – தனசேகரன்
20,000  ருபா
ஜெயசேகரம் – தனசேகரன் 50CAD

தவசேகரம் – தனசேகரன் £50
ஜெயரமேஷ் – ஜெயம் 50CAD
சோபனா – குண சேகரம் 50SFR (சுவிஸ்)
குண ராஜா – தவ ராஜா 100CAD
சதிசன் – சிவசுப்ரமணியம் 120CAD
சௌந்தராஜன் – குடும்பம் 100CAD
கலா – விக்னேஸ்வரன் 50 SFR (Swiss)
சசிகலா – புனிதம் 75  CAD
ஸ்ரீதரன் – சிவனேஸ்வரன் 50 CAD
ஜெய ராஜா – சிதம் பரன் 100 CAN
வசந்தன் – தங்கத்துரை  50 CAN
வடிவேல் வசந்தகுமார்  20,000 ரூபா
கருணாகரன் வசீகரன்   50 CAN
அரியறட்னம் அரியசிங்கம் 100 CAN
லோகனாதன் கதீஸ்வரன் 100 CAN
சவுந்தரராசன் அனந்தன்    150 CAN
ரூபன் ஜெசிந்தா                   50 CAN

Dr P இராசையா       £40
கி. இராசேந்திரன்   £40
ச மேனன்                   £20
வீ. யோகானந்தன்  $40 ( USD)
வீ. அமிர்தலிங்கம்   £40
சி.சிவவீலன்              £20
கி.பாஸ்கரதாஸ் (குட்டி) £20
P. அமுதவேல்            £20
ச.ராதாகிருஷ்ணன் £20
P.  சர்வேந் (தினா)    £50
S.  சிவஞானம்           £50
S.ஆனந்தன்               £25
S.பிரதீபன்                  £50

இந்த அகால நேரத்தில் உதவ முன்வந்த மேற்காட்டிய எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை எமது ஸ்தாபனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
பாரதி


கம்பர்மலை யுகே ஸ்தாபனம்,
லண்டன்,
29/01/2020

யாவருக்கும் வணக்கம் ,

மேற்படி கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற “ஒன்று கூடலும் கலை நிகழ்ச்சியும் ” விழா மிக கோலாகலமாக நடந்தேறியது .
சிறுவர்கள் முதல் முதியோர் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை மென்மேலும் சிறப்படுத்தினர்.
அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
வருகைதந்து, கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை எமது ஸ்தாபனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு, விழா வீடியோ, புகைப்பட பிடிப்பாளர் எங்கள் திரு சுரேன் தங்கவடிவேல் ஆவார்  அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒலிபெருக்கி  (DJ) வழங்கிய திரு பேரானந்தம் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி,
பாரதி

This slideshow requires JavaScript.

foundation-meeting-1.pngIMG-257d110076ce7931a6d262413c05c6d6

கம்பர்மலை யுகே ஸ்தாபனம் 

26/07/2019 .

அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்ககம் .

மற்றும் ,வீடு கட்டும் வேலை தொடந்து கொண்டே இருக்கிறது ,

ஓர் தற்காலிக கொட்டகையை கட்டி கொடுக்கலாம் என ஆரம்பித்து இப்போ அது 2 அறைகள் ஓர் விறாந்தை ,குசினி என ஓர் நிரந்தர வீடாக எழுந்துள்ளது .

காரணம், எமது ஊரில் உள்ள பலர் தாங்களாகவே முன்வந்து கட்டிடம் கட்டுவதற்கான பல பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் .

இவைதான் ஒற்றுமை ,இவைதான் சமூகசேவை , இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் எமது ஸ்தாபனத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .

அன்பளிப்பு வழங்கியவர் விபரம் :-

சீமெந்து கற்கள் வழங்கியோர் ,

  1. ஜெயம் ஜெயப்ரகாஷ்               100 
  2. லோகநாதன் கமலீஸ்வரன்   200 
  3. தேவதாஸ் மயூரன்                    100 
  4. பூக்கல்                                               12 
  5. தனசேகரம் சந்திரபால்              100 
  6. கிருஷ்ணன் பாலச்சந்திரன் (குட்டி )   100 
  7. தவராஜா ராஜன்  ,குசினி, கூரைக்கான Sheet வழங்கியுள்ளார் .
  8. சிவலிங்கம் சிறீகரன்,வீட்டு முன் கதவையும் ,நிலையையும் வழங்கியுள்ளார் 

மேலும் ,இந்த வீட்டு திட்டத்தை முடிப்பதற்கு நிதி மேலும் தேவையாக இருப்பதால் ,அங்கத்தவர்கள் அனைவரையும் நான் தாழ்மையாக வேண்டிக்கொள்வது , நீங்கள் தலா £20 பவுன் தருவீர்களேயானால் மேற்படி 7 பேர் கொண்ட இந்த (தாய் 6 வது குழந்தை கர்ப்பிணி )குடும்பம் வாழ்வதற்கு ஓர் வசிப்பிடம் கொடுத்த பெருமை எங்கள் எல்லோருக்கும் சார்ந்தவை .

நன்றி வணக்கம் .

பாரதி 

மேற்காட்டிய email பார்த்த பலர் இந்த வீடு கட்டுவதற்காக தலா £ 20  பவுண்களை அன்பளிப்பு செய்யுமாறு வேண்டியபோதும் ,அதற்கு மேலாக பெரும் தொகைகளை தந்திருக்கிறார்கள்.

பணம் அன்பளிப்புச்செய்த செய்த அனைத்து உள்ளங்களுக்கும் , எமது ஸ்தாபனத்தின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

மேலும் , ஏனையோரும் தங்கள் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் .

இதுவரை அன்பளிப்பு செய்தோர் விபரம் :-

  1. திருமதி இந்திராணி இராசைஜா                  £20.00 
  2. கே இராசேந்திரன்                                              £25.00 
  3. V சண்முகநாதன்                                               £20.00 
  4. T சுரேன்                                                                 £20.00 
  5. கே பாஸ்கரதாஸ் (குட்டி )                              £20.00 
  6. V அமிர்தலிங்கம்                                                £20.00 
  7. M குமாரதாசன்                                                    £108.00  

கனடாவில் இருந்து :-

  1. S திருநாவுக்கரசு (குணம் )                         ரூபா 15,300.00 /=
  2. ஞானம் வீடியோ                                             ரூபா 25,000.00/=
  3. குணசேகரம் வடிவேல் (சிவா )                           $100.00 USD 

மேலும் எமது Bank Account மூலமாகவும் ,

Bank Name: HSBC

Account Name: kamparmalai uk foundation

Acc. No: 32027410

S/C :  40-43-26

இல்லையேல் எமது website, kamparmalaiukfoundation.co.uk திறந்து PayPal 

Account மூலமாகவும் எமது வங்கிக்கு பணம் அனுப்பலாம் .

“உங்கள் ஆதரவு எமது ஊர் மக்களின் வளர்ச்சி “.

நன்றி ,

பாரதி


file.jpeg

WhatsApp Image 2019-06-16 at 16.56.51 (1)

IMG-20190529-WA0019

IMG-9d9fdb34ca4eeba2859d30d10182465b-V

செல்வி சௌந்தர்யா செல்வரத்தினம்
செல்வி சங்கவி செல்வரத்தினம்
ஆகிய இரு சகோதரிகளும் Highier National Diploma In English (HNDE)பட்டப்படிப்பை இரண்டு ஆண்டுகள் முடித்து அதன் பொருட்டு Trainees ஆக முறையே இமையாணன் வித்தியாலத்திலும் கம்பர்மலை வித்தியாலயத்திலும் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்
இவர்கள் மேலும் பல பட்டங்களையும் பதவிகளையும் பெற வாழ்த்துவதோடு இவர்களது கல்வியை ஊக்குவிக்கும் முகமாக எமது ஸ்தாபனம் இருவருக்கும் இரண்டு துவிசக்கர வண்டிகளை வழங்கி பாராட்டி கௌரவிக்கின்றது
நன்றி
இப்படிக்கு
பாரதி

PCSIMG-257d110076ce7931a6d262413c05c6d6

கம்பர்மலை யுகே ஸ்தாபனம்

12/04/19

அங்கத்தினர்கள் அனைவருக்கும் அறியத்தருவது,

இன்று (12/04/19) இரவு ஆங்கில வகுப்புகள் முடிந்ததும், பெற்றோர் மாணவர்கள்  உடனான ஓர் சம்பாசனை கூட்டம் எமது Dr P Rasiah தலைமையில் நடைபெற்றது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கம் தம்பி இராசையாவினால் வழங்கப்பட்டது.

கல்வியின் வளர்ச்சிதான் நமது ஊர் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். அந்த பணியை எமது ஸ்தாபனம் தொடர்ந்து செய்யும் என்பதை ஆணித்தரமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் இன்று எமது செயல்பாடுகளை அறிந்து எமது சொந்தங்கள் பலர் Foundation Group   இல் இணைந்து இருக்கிறார்கள், Like செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி.

உங்கள் சிந்தனைகளை  கூறுங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து எமது கிராமத்தை வளர்திடுவோம்.

நன்றி வணக்கம்,

பாரதி

WhatsApp Image 2019-03-08 at 08.03.09.jpeg

IMG-157bed86f739f6378ba3315e731d02aa-V

pic1Capture.PNG

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

KampPic.png

எமது ஸ்தாபனத்தின் ஆரம்பகார்தாவில் ஒருவரும் மூத்த தலைவரும் ஆகிய திரு கே ராஜேந்திரன் அவர்களின் 70 ஆவாது பிறந்தநாள் வாழ்த்துக்களை எமது ஸ்தாபனத்தின் சார்பாக பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் .

இங்கனம் .

கம்பர்மலை யூகே ஸ்தாபனம்
21/07/18
லண்டன் .

அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்ககம் ,
உங்களுக்கு ஏற்கனவே திரு யோகதாஸ் யோகேந்திரராசாவின் வேண்டுகோள் கடிதத்தை அனுப்பி இருந்தேன் அதில் அவர் தனக்கு பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் நடந்துதான் பாடசாலைக்கும் டியூஷனுக்கும் செல்கிறார்கள் எனவே ஓர் சகிக்கில் வாங்கி தருபடி கேட்டிருந்தார் .

இதை அறிந்த குணம் (திரு சின்னக்கிளி திருநாவுக்கரசு ) தனது இரண்டாவது மகன் பார்த்தன் பிறந்த நாள் (July 21,1998) இம்மாதம் 21 ஆம் திகதி , எனவே இந்த சயிக்கிள் வாங்க பணம் தருகிறேன் என்று திரும்பவும் 150 கனேடிய டொலர்களை அனுப்பி வைத்தார் .

அவர் முன்பும் தனது மற்றய இரண்டு மகன்களுடைய பிறந்த நாட்கள் நினைவாக தலா 150 டொலர்களை அனுப்பினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம் . குணத்திற்கும் அவர் மனைவி மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை எமது ஸ்தாபனத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .

அத்தோடு திரு யோகேந்திரராசாவின் பிள்ளைகளுக்கு சயிக்கிள் எமது அங்கத்தவர்களால் வழங்கும் புகைப்படம் உங்கள் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது .

To : Barthan,

On behalf of all our members we wish you Happy Birthday and for all your dreams to come true.

இங்கனம்
பாரதி ( V Amirthalingam – President – Kamparmalai UK Foundation )

IMG-20180720-WA0000

கம்பர்மலை யுகே ஸ்தாபனம் 17/07/18
லண்டன் .

அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்ககம் ,
இங்கு ஓர் முக்கிய செய்தியை உங்களுக்கு தரவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளேன் .

அதாவது சென்றவருடம் ஆவணி மாதம் ஓர் ஆங்கில வகுப்பை காலம்சென்ற திரு தங்கேஸ்வரலிங்கம் மனைவி திருமதி விஜயா தங்கேஸ்வரலிங்கம் கேட்டதிற்கு இணங்க சுமார் 26 மாணவர்களுடன் சகுந்தலை முன்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டு செம்மனே நடந்து வந்தது. இதன் முதல் வருட ஆசிரியர் சம்பளத்தை தான் தருவதாக திரு கி இராசேந்திரன் சொல்லி அதேபோல தந்து வந்தார் . திருமதி விஜயாவிடம்தான் முற்பள்ளி திறப்பு இருந்தது அதனால்தான் ஆங்கில வகுப்பை சிறப்பாக நடாத்த முடிந்தது .

சென்றமாதம் தாங்கள் ஓர் சங்கீத கலை வகுப்பை ஆரம்பிக்கப்போகிறோம் என்று திறப்பை வாங்கிய பொன்கந்தையா ச ச தலைவர் திரு ஜெயம் திறப்பை திருப்ப கொடுக்கவில்லை. திருமதி த. விஜயா திறப்பை திருப்ப கேட்டபோது அவர் அதை தர மறுத்து விட்டார் காரணம் தமது நிர்வாக அங்கத்தவர்களுக்கு உங்களிடம் திறப்பு இருப்பது விருப்பம் இல்லை என்று சொன்னார் . யார் அவர்கள் என்று கேட்டபோது அதை சொல்ல மறுத்துவிட்டார் . நிர்வாக கூட்டம் கூடி முடிவெடுத்தீர்களா என்று கேட்டபோது அதற்கான பதில் கூட்டம் கூடினால் யார் வரப்போகிறார்கள் என்பது .

எனவே அவரை தொடர்பு கொண்டு கேட்டேன் ” தம்பி இது பிள்ளைகளின் எதிர் காலத்தோடு சம்மந்தப்பட்டது அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டால் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள் அதற்கு தடையாக இருக்கக்கூடாது ” அதற்கு அவர் ஓம் நான் திறப்பு கொடுக்கிறேன் என்று உறுதி கூறினார் ஆனால் அவர் திறப்பை திருப்பி கொடுக்கவேயில்லை .

எமது ஸ்தாபனத்தின் துணையோடுதான் இந்த ஆங்கில வகுப்பு ஆரம்பித்து
நடாத்தப்பட்டுவந்தது , அப்படி இருக்க ஒருவரையும் அனுமதி கேட்காமைல் எப்படி இவர்களால் இவ்வாறு நடக்க முடியும் ?.

இதற்கு தலைவர் திரு ஜெயமும் அவர் நிர்வாகமும்தான் பதில் தரவேண்டும் .மேலும் முற்பள்ளி காணியின் உறுதி பத்திரத்தை பெறுவதற்கான பணம் , முற்பள்ளி ஆசிரியர் சம்பளம் என்பவற்றை எமது ஸ்தாபனம்தான் கொடுத்து வந்தது , ஆதாரம் இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது .

அது மட்டும் அல்லாது போன் கந்தையா சன சமூக நிலையத்திற்கு புனர் நிர்வரான வேலைகளுக்கென்று லட்ச்சக்கணக்காக பணம் கொடுத்திருந்தோம் .

அப்படி இருந்தும் இப்படி நடந்து நல்லவை நடக்க தடங்கல் செய்துகொண்டு இருக்கிறார்கள் .

இது கலாவணி ச ச நிலைய தலைவர் சமீபத்தில் நடந்த G C E ( O / L ) பரீச்சயில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசளிப்பு விழாவிற்கு மேடை தர முடியாது என்று மறுத்ததை போலவே இதுவும் இருக்கிறது .

சரி , இப்போது ஆங்கில வகுப்பு எப்படி நடக்கறது என்று பார்த்தால் அது இப்போ சனி, ஞாயிறு ஆகிய நாட்களில்தான் பாடம் நடத்தப்படுகிறது அத்தோடு மாணவர் தொகை 7 அல்லது 8 ஆக குறைந்துவிட்டது ,அதுவும் சிறுபிள்ளைகளே.

எமது ஸ்தாபனத்தின் திட்டங்களில் கல்விக்குத்தான் முதல் இடம் கொடுக்கப்படுகிறது ,எனவே மேற்காட்டிய செயற்பாட்டுக்கு தகுந்த விளக்கத்தை எதிர் பார்க்கிறோம் ..
இப்படிக்கு ,வீ.

அமிர்தலிங்கம் (President – Kamparmalai UK Foundation)

IMG-489f8ede512263268ad2fae524f0261b-V (1)

Click here for more…

மரண அறிவித்தல்
திருமதி நல்லம்மா செல்வரட்ணம்

122164

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா செல்வரட்ணம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான M.E செல்லர் தம்பதிகளின் சிரேஷ்ட பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(முன்னாள் கல்வி அதிகாரி – இலங்கை, உயர்தர பாடசாலை ஆசிரியர்- கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயசீலன்(லண்டன்), தர்மசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா(நடராசா புடவைக்கடை உரிமையாளர்) தம்பதிகள், திரு. திருமதி நவரட்ணம் (M.E.S.N தொழிலதிபர்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

யோகம்மா, தம்பிரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராமலிங்கம்(விவசாயப் போதனாசிரியர்- இலங்கை), நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனலக்சுமி(ரஜனி), ரஜனிபிரபா, திருச்செல்வம், காலஞ்சென்ற அருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இந்திராகாந்தி, சசிகலா, நித்தியகலா, மதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஜெயபவானி(லண்டன்), சிவதாஸ்(இந்தியா), சிவரூபன்(இந்தியா), ஜெயதர்சினி(கனடா), குகதாஸ்(கனடா), கிருஸ்ணதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

Dr. இராசையா(லண்டன்), சசிதரன்(கனடா), ஜெயகாந்தன்(கனடா), துசாந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபிராமி, அஞ்சலி, தரணிகன், செரீனா, இரஜிந்தன், ஜனார்தன், லக்‌ஷானா, மயூரன், துவாரகன், சரன், லவன், கெளதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்நிகழ்வுகள்பார்வைக்குதிகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 02:00 பி.ப — 04:00 பி.பமுகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியைதிகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 04:00 பி.ப — 06:00 பி.பமுகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம்திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 06:30 பி.ப — 07:00 பி.பமுகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada தொடர்புகளுக்குஜெயசீலன்(மகன்) — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447902122184தர்மசீலன்(மகன்) — கனடாசெல்லிடப்பேசி:+16479881936சசிகலா(பெறாமகள்) — கனடாசெல்லிடப்பேசி:+16477036005Dr.இராசையா(மருமகன்) — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447949647515

 
Kamparmalai UK Foundation
London
15/06/18
அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்ககத்தை தெரிவித்துக்கொல்கிறேன்.
இங்கே ஓர் வேண்டுதல் கடிதம் இணைக்கப்பட்டிருக்கிறது. அது திருமதி இராசதுரை ரஞ்சினிஅவர்களால் தனது 5 பிள்ளைகளும் நடந்துதான் பாடசாலைக்கு செல்கிறார்கள் எனவே ஒரு சயிக்கிள் வாங்கித்தாருங்கள் என்று கேட்டு இருக்கிறார்.
இதை அறிந்த திரு சின்னக்க்கிளி திருநாவுக்கரசு (குணம் ) அவர்கள் தனது மூத்த மகன் அசோக் திருநாவுக்கரசுவின் பிறந்த நாள் ஜூன் மாதம் 16 ஆம் திகதி எனவே அவர் பிறந்தநாள் ஞாபகமாக இந்த சயிக்கிள் வாங்க நான் பணம் தருகிறேன் என்று சொல்லி திரும்பவும் 150 கனேடியன் டொலர்களை அனுப்பியிருந்தார் . குணத்தின் தாராள மனதுக்கு எமது ஸ்தாபனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கப்புகிறேன்.
மேலும் திருமதி இராசதுரை ரஞ்சினியின் பிள்ளைகளுக்கு எமது அங்கத்தவர் சயிக்கிள் வழங்கும் புகை படத்தை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
Asok, on behave of all our members I wish you a wonderful Birthday. God Bless you, From all of us.
இப்படிக்கு ,
பாரதி
V Amirthalingam ( President & Founder of KUKF)
 
IMG-39f9e6d1d350c05030fd073d18d42b50-V
 
London Periyappu Ninaivu
 
Ninaivunaal
 
Kamparmalai UK Foundation
London,
26/05/18
 

அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்ககம் ,

IMG-cd92496b1f5ab875e807c856b07ae3c5-V

இங்கு திரு ஸ்ரீகாந்தன் அவர்களுக்கு அவர் வேண்டுதல் படிஎமது ஸ்தாபனம் ஓர் சயிக்கிள் யங்கம்பன்ஸ் மைதானத்தில் வழங்கும் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கிறது .அவர் பலனை அல்லது பேர்வாங்கவேண்டும் என்று எதிர்பாக்காமல் ஊருக்கு தொண்டு செய்யும் ஒரு நல்ல மனிதன் .அதனால்தான் நான் கடைசியாக உங்களுக்கு அனுப்பிய செய்தியில் அவருக்கு சயிக்கிள் கொடுப்பது நல்லது என்று தெரிவித்திருந்தேன் .
அதனை பார்த்த கனடாவில் வசிக்கும் திரு சின்னக்கிளி திருநாவுக்கரசு (குணம்), அண்ணா! எனது மகள் சகானாவின் பிறந்த நாள் இந்த மாதம் 29 ஆந் திகதி வருகிறது அதன் நினைவாக இந்த சயிக்கிள் பரிசளிப்பை செய்வதற்கு உங்கள் ஸ்தாபனத்திற்கு நான் பணம் தருகிறேன் என்று சொல்லி 150 கனடா டொலரும் அனுப்பியிருந்தார் .
அவருக்கு எமது நன்றி அவரின் மகள் சகானாவிற்கு முற்குட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களை எமது ஸ்தாபனம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
பாரதி

கம்பர்மலை யு கே ஸ்தாபனம்
லண்டன்
29 /04 /18
அங்கத்தவர்கள் அனைவருக்கும் வணக்கம்
.மேலும் நான் உங்களுக்கு அறிவித்ததுபோல GCE (O /L ) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவியர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ( 27 /04 / 18 ) அன்று பிற்பகல் 6 மணியளவில் இளைப்பாறிய ஆசிரியர் திரு யோகசாமி அவர்கள் தலைமையில் மிக பிரமாண்டமாக நடந்தேறியது
சுமார் 48 மாணவ .மாணவியர்களுக்கு பரிசாக சேட்டிபிகேட் , மெடல் ,KUKF 5 ஆம் ஆண்டு நினைவு பேனை இன்னும் இரண்டு ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்ட்து .
என்ன ? நோட்டீஸில் போடப்பட்டதுபோல மாலை நான்கு மணிக்கு தொடங்கவில்லை ஆறு மணிக்குத்தான் தொடங்கியது காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம் . அது கலாவாணி சன சமூகத்தின் தலைவர் திரு சி தயானந்தராசா ( ரவி ) மேடையை எமக்கு தரமுடியாது என்று அன்று காலை 10 மணியளவில்தான் தெரிவித்தார் .
அதனால்தான் அயலூரில் இருந்து மேடை வாடைக்கு பிடிக்க்கப்பட்ட்து .
அது என்னவோ நேரம் செல்ல செல்ல மக்களும் வந்து கொண்டிருக்க கடைசியில் விழா தொடங்கும் பொது பெரும்திரளான மக்கள் கூடி விழாவை சிறப்பித்தார்கள் .
இந்த விழாவை சிறப்பாக நடாத்த உழைத்த அத்தனை இளைஞர்,யுவதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை எமது ஸ்தாபனம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்
நிகழ்ச்சியின் பொது எடுக்கப்படட சில புகை படங்களை இங்கு உங்கள் பார்வைக்காக தருகிறேன் .
பின்பு வீடியோ மற்றும் புகை படங்கள் வரும்போது மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி வணக்ககம்
இங்கனம்
பாரதி
( வீ அமிர்தலிங்கம் – Founder & President of KUKF )

This slideshow requires JavaScript.

Click here to see full album

Capture

கம்பர்மலை யூகே ஸ்தாபனம்

(KAMPARMALAI UK FOUNDATION, EST.2012)
நீண்ட காலமாக எமது மக்களின் சந்திப்புகள், ஒன்று கூடல்கள், விழாக்களில் தொடர்ந்தும் கதைக்கப்பட்ட, பேசப்பட்ட விடயம், தற்போது ஒரு பொலிவுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கம்பர்மலை யூகே ஸ்தாபனம்.
ஆம், 09.06.2012 அன்று தொடக்கம் இந்த ஸ்தாபனம் வெகுவிமர்சியாக வைபவ ரீதியாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
யாழ்/கம்பர்மலை கிராமத்தின் தேவைகளை முன்னிறித்தி இவ்வமைப்பு தனது செயல் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
சமுதாய ஒருங்கிணைப்பு, சமூக, பொருளாதர, கல்வி, கலாச்சார முன்னேற்றத்திக்காக தனது செயற்பாடுகளை விரிவு செய்வதன் மூலம் எமது கிராமத்தை முன்னேற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முதல் கட்டமாக, அடிப்படை வசதியற்ற மக்களை, விழிப்புணர்வூட்டி, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து, இளைய சமுதாயம் கல்வி கற்பதற்கேற்ப வசதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தாயகத்திலும், வெளிநாடுகளிலும் இருக்கும் எமது கிராமத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து முடியுமான உதவிகளை பெற்று, அதனை யூகே இலிருந்து ஒருங்கிணைத்து, எமது கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்து ஒரு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதே கம்பர்மலை யூகே ஸ்தாபனத்தின் இலட்சியமாகும்.

வணக்கம், உறவுகளே !

கம்பர்மலை கிராமத்திற்கும் கம்பர்லையிலிருந்து பிரித்தானியா சென்ற மக்களுக்குமானதொரு உறவுப்பாலமாய் அமைந்த கம்பர்மலை யூகே ஸ்தாபனத்தினராகிய எங்களால் எங்கள் கிராமத்து மக்களுடனான உறவினை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் https://kamparmalaiukblog.wordpress.com/  கம்பர்மலை யூகே இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தளவேலைகள் முழுமையாக முடிவுற்றதும் நாம் உங்களுடன் இணைந்துகொள்வோம்

நன்றி