கம்பர்மலை கீதம்
பல்லவி
கண்கவர் யாழ்நகர் கம்பர்மலை வாழ்க!
கம்பர்மலை பிரித்தானியாக் கழகம் வாழ்க!
சரணங்கள்
முத்தமிட் கலைகள் நித்தமும் கொழிக்கும்
மூதறி ஞர்வாழ் ஊரே வாழ்க!
நெற்குழு ஞான வைரவ ருடனே
நேரிய மனோன்மணி அருள்பவள் வாழ்க! (கண்கவர்…)
வளமிகு களனிசேர் வயல்வெளி யோடு
வருடியே பசுமைகொள் சோலைக ளாடும்
குளம்தரும் நீர்நிலை குளிர்மையைச் சேர்க்கும்
குறைவின்றிச் செல்வங்கள் மனைகளிற் பூக்கும் (கண்கவர்…)
மாவீரன் சங்கரை வார்த்தமண் வாழ்க!
மாசற்ற சமூக நிலையங்கள் வாழ்க!
தீவிர தேடலும் திறமைநல் லுழைப்பும்
திடமான பிணைப்பும் திளைத்தவள் வாழ்க (கண்கவர்…)
ஆல விருட்சமாய் அன்பு வளர்ந்திடும்
அறிவைப் பாட சாலை சுரந்திடும்
காலம் வென்றிடும் கல்வி பெருகிடும்
கம்பர் மலைபுகழ் எங்கும் பரவிடும் (கண்கவர்…)

