English lesson/Tuition

கம்பர்மலை யுகே ஸ்தாபனம்

12/04/19

அங்கத்தினர்கள் அனைவருக்கும் அறியத்தருவது,

இன்று (12/04/19) இரவு ஆங்கில வகுப்புகள் முடிந்ததும், பெற்றோர் மாணவர்கள்  உடனான ஓர் சம்பாசனை கூட்டம் எமது Dr P Rasiah தலைமையில் நடைபெற்றது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கம் தம்பி இராசையாவினால் வழங்கப்பட்டது.

கல்வியின் வளர்ச்சிதான் நமது ஊர் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். அந்த பணியை எமது ஸ்தாபனம் தொடர்ந்து செய்யும் என்பதை ஆணித்தரமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் இன்று எமது செயல்பாடுகளை அறிந்து எமது சொந்தங்கள் பலர் Foundation Group   இல் இணைந்து இருக்கிறார்கள், Like செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி.

உங்கள் சிந்தனைகளை  கூறுங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து எமது கிராமத்தை வளர்திடுவோம்.

நன்றி வணக்கம்,

பாரதி

Posted in Uncategorized | Leave a comment

கம்பர்மலை கீதம்

கம்பர்மலை கீதம்

பல்லவி

கண்கவர் யாழ்நகர் கம்பர்மலை வாழ்க!
கம்பர்மலை பிரித்தானியாக் கழகம் வாழ்க!

சரணங்கள்

முத்தமிட் கலைகள் நித்தமும் கொழிக்கும்
மூதறி ஞர்வாழ் ஊரே வாழ்க!
நெற்குழு ஞான வைரவ ருடனே
நேரிய மனோன்மணி அருள்பவள் வாழ்க!                  (கண்கவர்…)

வளமிகு களனிசேர் வயல்வெளி யோடு
வருடியே பசுமைகொள் சோலைக ளாடும்
குளம்தரும் நீர்நிலை குளிர்மையைச் சேர்க்கும்
குறைவின்றிச் செல்வங்கள் மனைகளிற் பூக்கும்        (கண்கவர்…)

மாவீரன் சங்கரை வார்த்தமண் வாழ்க!
மாசற்ற சமூக நிலையங்கள் வாழ்க!
தீவிர தேடலும் திறமைநல் லுழைப்பும்
திடமான பிணைப்பும் திளைத்தவள் வாழ்க                 (கண்கவர்…)

ஆல விருட்சமாய் அன்பு வளர்ந்திடும்
அறிவைப் பாட சாலை சுரந்திடும்
காலம் வென்றிடும் கல்வி பெருகிடும்
கம்பர் மலைபுகழ் எங்கும் பரவிடும்                             (கண்கவர்…)

Posted in Uncategorized | Leave a comment