Messages

யாவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம் ,                            18/09/16

எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்படட எமது ஸ்தாபனம் இன்று 5 ஆவது வருடத்தில் கால்பதித்துள்ளது .கடந்த ஞாயிறு  (11-09-16) அன்று நடந்த பொதுக்கூடத்தில் ,தற்போதைய நிர்வாகமே  தொடர்ந்தும் இயங்கவேண்டும் என பிரேரிக்கப்பட்டு, சில அங்கத்தவர்கள் மாற்றத்தோடு சபையினரால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட்து .

எனவே எமது சேவைகள் தொடரும் குறிப்பாக ,இளைய சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ,அதற்கான  புதிய திட்டங்களும் ஆராயப்பட்டு வருகிறது என்பதனையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் .

எமது வேண்டுகோளுக்கிணங்க எமது ஊரில் செயல் புரியும் கீழ் வரும் தொண்டர்கள் ;

திரு சின்னக்கிளி ,திருமதி லதா மேரி,திரு தங்கேஸ்வரலிங்கம் ,திரு சக்திவேல் ஆசிரியர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை எமது ஸ்தாபனம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .

இப்படிக்கு ,

பாரதி ( தலைவர் KUKF