Varthiyaar

 

சில இடை வெளிக்கு பின் ஆரம்பித்திருக்கும் எமது இணையத்தளத்தில் காலம்சென்ற திரு தங்கவடிவேல் ஆசிரியரை நினைவு கூறும் முகமாக அவர் எமது ஸ்தாபனம் நடாத்திய முதலாவது ” ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும்” விழாவிற்கு தந்த வாழ்த்துச்செய்தியை இங்கு தருகிறோம்

Vartiyaar

தென்றல் பாடும் கீதம் -இன்பத்

தேனாய் தமிழில் ஊறும்

அன்பில் விளையும் இன்பம் -நெஞ்சின்

அலையாய் எழுந்து தவழும்

பண்பில் வளரும் உறவு -என்றும்

பாசப் பிணையாய் பெருகும்

ஒன்றாய் இணையும் மனதில் -எங்கள்

ஒற்றுமை வளர்ப்போம் வாரீர் .