கம்பர்மலை யு கே ஸ்தாபனம்
லண்டன்
29 /04 /18
அங்கத்தவர்கள் அனைவருக்கும் வணக்கம்
.மேலும் நான் உங்களுக்கு அறிவித்ததுபோல GCE (O /L ) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவியர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ( 27 /04 / 18 ) அன்று பிற்பகல் 6 மணியளவில் இளைப்பாறிய ஆசிரியர் திரு யோகசாமி அவர்கள் தலைமையில் மிக பிரமாண்டமாக நடந்தேறியது
சுமார் 48 மாணவ .மாணவியர்களுக்கு பரிசாக சேட்டிபிகேட் , மெடல் ,KUKF 5 ஆம் ஆண்டு நினைவு பேனை இன்னும் இரண்டு ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்ட்து .
என்ன ? நோட்டீஸில் போடப்பட்டதுபோல மாலை நான்கு மணிக்கு தொடங்கவில்லை ஆறு மணிக்குத்தான் தொடங்கியது காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம் . அது கலாவாணி சன சமூகத்தின் தலைவர் திரு சி தயானந்தராசா ( ரவி ) மேடையை எமக்கு தரமுடியாது என்று அன்று காலை 10 மணியளவில்தான் தெரிவித்தார் .
அதனால்தான் அயலூரில் இருந்து மேடை வாடைக்கு பிடிக்க்கப்பட்ட்து .
அது என்னவோ நேரம் செல்ல செல்ல மக்களும் வந்து கொண்டிருக்க கடைசியில் விழா தொடங்கும் பொது பெரும்திரளான மக்கள் கூடி விழாவை சிறப்பித்தார்கள் .
இந்த விழாவை சிறப்பாக நடாத்த உழைத்த அத்தனை இளைஞர்,யுவதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை எமது ஸ்தாபனம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்
நிகழ்ச்சியின் பொது எடுக்கப்படட சில புகை படங்களை இங்கு உங்கள் பார்வைக்காக தருகிறேன் .
பின்பு வீடியோ மற்றும் புகை படங்கள் வரும்போது மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி வணக்ககம்
இங்கனம்
பாரதி
( வீ அமிர்தலிங்கம் – Founder & President of KUKF )

