அங்கத்தவர்கள் அனைவருக்கும் வணக்ககம் .
இங்கு ஓர் மகிழ்ச்சிகரமான நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய செய்தியை உங்கள் பார்வைக்கு தருகிறேன் .
நாம் எமது ஊர் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் ஆறு வருடங்களாக மாதாமாதம் 18 ஆயிரம் ரூபாக்களை மாணவர்களின் “Tuition Fee ” ஆக செலுத்தி வந்ததை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் .
அதன் பலனை நாம் இப்போது காணாக்கக்கூடியதாக இருக்கிறது .
எமது ஊரின் கொலனி பக்கத்தில் இருந்து நான்கு மாணவர்கள் GCE (O /L ) பரீட்சையில் பாஸ் பண்ணி A /L படிக்கவும் முன்வந்துள்ளனர் .
அவர்கள் விபரம் வருமாறு :-
1 செல்வகுமார் டிலேச்சனா
(5A,3B,1C)
2 . பிரபாகரன் பிரபாலினி
( 2A, 2B,4C)
3 . ரத்தினராசா செல்சியா
(2A,1B,3C,2S)
4 . மகேந்திரராசா செந்தீபன்
(1A,3B,3C,1S
“Congratulations all around ”
ஊர் மக்கள் என்ன இது, காலனியில் இருந்து இத்தனை பேர் பாஸ்சபணியிருக்கினம் என்று அதிசயமாக கேட்க்கிறார்களாம் ?
அதற்க்கான பதிலும் அங்கு பேசப்படுகிறது , அது அவர்களுக்கு லண்டனில் இருந்து உதவி கிடைத்தது என்று .
தொடர்ந்து எமது ஸ்தாபனத்துக்கு பணம் தந்துகொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி , இந்த பெருமை உங்களுக்கு சேர்ந்தவை .
நன்றி வணக்ககம் ,
இங்கனம் ,
பாரதி


